என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஜெய் ஷா
நீங்கள் தேடியது "ஜெய் ஷா"
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மேலும் புதிய அணிகள் இணைவதால் போட்டி மிகவும் உற்சாகமாக இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
சென்னை:
14வது ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசியதாவது:-
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விளையாடுவதைப் பார்க்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அதற்கான தருணம் வெகு தொலைவில் இல்லை. ஐபிஎல் 15வது சீசன் இந்தியாவில் நடைபெறவுள்ளது. மேலும் புதிய அணிகள் இணைவதால் போட்டி மிகவும் உற்சாகமாக இருக்கும். புதிய அணிகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஒரு மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது.
பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கான பெருமை அணியின் உரிமையாளர் சீனிவாசனையே சேரும். இக்கட்டான காலங்களில் அணிக்கு ஆதரவாக நின்றார். இதேபோல் காசி விஸ்வநாதன் அணியை ஒன்றிணைக்கும் பசை போன்றவர். ஒவ்வொரு சீசனிலும் அவர் அணியை வழிநடத்தினார்.
டோனி போன்ற கேப்டன் இருக்கும்போது, சென்னை சூப்பர் கிங்சை எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்? அணியின் இதயத்துடிப்பு மற்றும் முதுகெலும்பு டோனி. இந்தியா இதுவரையில் உருவாக்கிய மிக வெற்றிகரமான கேப்டன். அவர் ஏற்படுத்திய பிணைப்பு, அவர் உருவாக்கிய மரபு நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
×

X